[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
  • BREAKING-NEWS நவ.26 முதல் 28வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்- இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS உத்திரப்பிரதேசம் பண்டாவில் வாஸ்கோடாகாமா- பாட்னா விரைவு ரயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து
  • BREAKING-NEWS விளை நிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம், ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட 8 ஊர்களில் கடையடைப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தை பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்- தமிழிசை
அரசியல் 06 Nov, 2017 05:40 PM

மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை: வேலுமணி

regular-life-not-affected-due-to-rain-minister-velumani

சாலைகளில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். இதுவரை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர், " ஏரிகளில் நீர் நிரம்பினால் அருகாமையிலுள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வளவு மழை பெய்த போதிலும் எங்கேயும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையும் மாறவில்லை. மிகவும் தாழ்வான பகுதிகளில் கூட மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இருப்பினும் ஊத்து போல தான் அங்கே தண்ணீர் வருகிறது. சாலைகளில் தேங்கியுள்ள நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டது. மற்ற நிலங்களில்  நீர் இருந்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும்" என்று தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இதுவரை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close