[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

ஆறு, குளங்களை தெய்வமாக கும்பிடுங்கள்: விவசாயிகள் மத்தியில் கமல் பேச்சு

people-should-include-river-lake-pond-in-gods-list-and-pray-that-also-actor-kamal-speech-with-farmers-in-chennai

ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தெய்வங்களின் பட்டியலில் சேர்த்து கும்பிட வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை அடையாறில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் நடிகர் கமல் கலந்து கொண்டார். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, கூட்டுறவு வங்கிகளில் நிபந்தனையின்றி கடன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை விவசாயிகள் கமலிடம் தெரிவித்தனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய கமல், “ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளை நீங்கள் கும்பிடும் தெய்வங்களின் பட்டியலில் சேர்த்துவிடுங்கள். பகுத்தறிவாளனான நானே கூறுகிறேன் என்றால் அந்த அளவிற்கு பதறிப்போய் உள்ளேன் என்று புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகள் மத்தியில் வாக்கு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்கவே வந்துள்ளேன்” என்று கூறினார். 

மேலும் அவர் பேசுகையில், “தங்களது குறைகளை சொல்லி ஒப்பாரி வைக்காமல், இதுதான் நிலைமை, இதுவெல்லாம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கூறும் போது மண்ணிற்கு அடியில் ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல தங்கம், வைரம் இருந்தாலும் பரவாயில்லை விவசாயம் நடக்கட்டும் விட்டுவிடுங்கள் என்றார். முன்னேற்றம் என்ற பெயரால் இயற்கையை சூறையாடுதல் நம் நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. வேளாண் துறையை தொழில்மயக்கினால்தான் அனைவரும் வாழ முடியும். பக்கத்தில் உள்ள மாநிலங்கள் கூட நாம் சோறு போடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 7 ஆயிரம் 8 ஆயிரம் வருடத்து பழையமான தொழில் விவசாயம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close