[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

கொறடா உத்தரவை மீறியபோதே ஓபிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழந்துவிட்டார்கள்: திமுக எம்.எல்.ஏ. மனு

when-ops-support-mlas-disobey-whip-order-then-itself-theu-unqualified-dmk-in-hc

எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மற்றும் 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டி மனுத்தாக்கல் செய்துள்ளார். 

கொறடா உத்தரவை மீறியபோதே அவர்கள் தகுதியிழந்து விட்டதாகவும், அவர்களை சபாநாயகர் தனியாக தகுதியிழப்பு செய்து உத்தரவிட வேண்டிய அவசியமில்லை என்றும் பிச்சாண்டி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, எம்எல்ஏவாக பதவி வகிக்க இயலாத ஓ.பன்னீர்செல்வமும், மாஃபா பாண்டியராஜனும் அமைச்சர்களாக பதவி வகிப்பது எப்படி என தன்னிலை விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கு.பிச்சாண்டி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இருவரும் அமைச்சராக நீடிப்பது சட்டவிரோதம் என்பதால், நீதிமன்றம் தலையிட்டு இருவருக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் பிச்சாண்டி வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close