[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

ஆர்.கே.நகரில் தேமுதிக போட்டியிடாது: விஜயகாந்த் அறிவிப்பு

dmdk-will-not-contest-in-rk-nagar-bypoll-election-vijayakanth-says

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை, விஜயகாந்த் நேரில் சந்தித்து இன்று நலம் விசாரித்தார் 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெங்கு காய்ச்சல் பற்றி பிரதமர் மோடியிடம் முறையிட்டு என்ன நடக்கப் போகிறது?. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை விட, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதே முக்கியம். டெங்கு பாதிப்பால் ஆட்சி மாற்றமே ஏற்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது” என்றார். 

முன்னதாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சென்று நலம் விசாரித்த விஜயகாந்த், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கையேடு வினியோகம் செய்து, நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close