[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
அரசியல் 11 Oct, 2017 10:13 AM

மனசாட்சிப்படியே கூறினேன்: சசிகலா குறித்து செல்லூர் ராஜூ மீண்டும் திட்டவட்டம்

minister-sellur-raju-remarks-about-sasikala

ச‌சிகலாவால் தான் தற்போதைய அதிமுக அரசு அமைந்தது என்பதை தமது மனசாட்சிப்படியே கூறியதாக அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க, சசிகலா பரோலில் வந்துள்ள நிலையில் அதிமுக ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த 8-ஆம் தேதி தெரிவித்திருந்தார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை தொடர்ந்து, தற்போது தான் ஸ்லீப்பர் செல் உறுப்பினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி குறிப்பிட்டார். ஆனால் தான் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், ச‌சிகலாவினால் தான் தற்போதைய அதிமுக அரசு அமைந்தது என்பதை தமது மனசாட்சிப்படியே கூறியதாக அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை உசிலம்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “என் மனசாட்சி படி தனிப்பட்ட முறையில் என் கருத்தை தெரிவித்தேன். விமர்சனங்களும், வாழ்த்துகளும் வருவது சகஜம்தான். அதனை பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close