[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
  • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
அரசியல் 09 Oct, 2017 10:09 PM

தமிழகத்தில் தான் திரைத்துறைக்கு பல சலுகைகள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

more-offers-to-tn-film-industry-compare-to-other-state-kadambur-raju

பிற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் திரைத்துறைக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கேளிக்கை வரி 30 சதவீதமாக இருந்த போது, அதை நீக்குவதற்கும் குறைப்பதற்கும் வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், அதை பரிசீலிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்ற அதிகாரிகள், அனைத்து தரப்பினரிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் அடிப்படையில்தான் கேளிக்கை வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. திரையரங்க உரிமையாளர்கள்தான் தங்களுக்கு கட்டணத்தை உயர்த்தி தந்தால், முறைப்படி அரசுக்கு கட்ட வேண்டிய வரியை செலுத்தி விடுவோம் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனையடுத்து திரைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுத்தான் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் திரைத்துறைக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, திரைப்படங்களின் பெயரை தமிழில் வைத்தால், அதற்கு மானியம் வழங்கும் ஒரே அரசு தமிழக அரசுதான். கேளிக்கை வரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ தற்போது எந்த திட்டமும் இல்லை. டிக்கெட் விலை உயர்ந்ததால் 10% கேளிக்கை வரி காரணமாக திரைத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close