[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
அரசியல் 09 Oct, 2017 07:01 PM

ஜெயலலிதா இல்லம் வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

jayalalitha-house-case-by-deepa

ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற த‌டை கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து, அவரது அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தங்கள் பாட்டி சந்தியா தான் போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலையம் உள்ளிட்ட பல சொத்துக்களை வாங்கியதாகவும், அந்த வீட்டில் தான் தனது அத்தை ஜெயலலிதா மற்றும் தந்தை ஜெயக்குமார் ஆகியோர் கூட்டுக்‌ குடும்பமாக வசித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் எந்த உயிலும் எழுதி வைக்காததால் அந்தச் சொத்துக்களுக்கு தானும் தனது சகோதரர் தீபக்கும்தான் சட்டப்பூர்வ வாரிசு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால் தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிட அரசுக்கு ‌எவ்வித அதிகாரமும் இல்லை என தீபா தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.‌ரவி‌ச்சந்திரபாபு, அரசு தரப்பில் பதிலளிக்குமாறு கூறினார். இதையடுத்து வழக்கு குறித்து பதிலளிக்க அரசு தரப்பில் ஒருவாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு ஒப்புக்கொண்ட நீதிபதி, ஒருவாரத்திற்குப் பிறகு வழக்கு விசார‌ணையின்போது, தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் செயலர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close