[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
அரசியல் 09 Oct, 2017 05:32 PM

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வைகோ பாராட்டு

vaiko-compliment-to-pinarayi-vijayan

கேரள முதல்வர் பினராயி விஜயனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.

கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற அனைத்து சாதியர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில் அர்ச்சகர்களாக தேர்வு செய்து இருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் 26 பேர் பிராமணர்கள். பிராமணர் அல்லாதோர் 36 பேர். ஆக 62 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேர். இந்த நடவடிக்கைக்காக கேரள அரசின் முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி இருக்கிறார் வைகோ.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க முடியாது என்று இருந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தந்தை பெரியார் அவர்கள் வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது வரலாற்றின் வைர வரிகளாகும். அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார். அவருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நடத்திய கேரளாவில் பெற்ற வெற்றியை, பெரியார் பிறந்த தமிழகத்தில் ஈட்ட முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close