[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
 • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
 • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
அரசியல் 08 Oct, 2017 11:56 AM

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குக: ஸ்டாலின்

dmk-mkstalin-congrats-kerala-chiefminister

கேரளாவை போன்று தமிழகத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். கேராளவில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணி இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள பிற கோவில்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசாணை என்பதைக் கடந்து, தனி சட்டமே நிறைவேற்றப்பட்ட நிலையிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மனமில்லாத ஒரு அரசு இப்போதும் ஆட்சி செய்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாக  செயல்பட வேண்டுமென என வலியுறுத்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close