[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
அரசியல் 06 Oct, 2017 06:09 PM

வாரிசு அரசியல் மாற வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

karthi-chidambaram-political-speech

வாரிசு அரசியல் மாற வேண்டும் என்றும் வாரிசு என்ற ஒரே தகுதியில் யாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவை எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அவர்களது கட்சிக்குள் இருந்த சிலரும் விமர்சிக்கின்றனர். வாரிசு அரசியல் என்பது அனைத்து கட்சியிலும் இருக்கும் ஒரு நிலைதான். காங்கிரஸ் மட்டும் வாரிசு அரசியல் நடத்துவதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ, வசுந்தராவின் மகன் ராஜஸ்தானில் எம்.பி, முண்டேவின் மகள் மகாராஷ்டிராவில் அமைச்சர், மஹாஜனுடைய மகள் எம்.பி, ராமன் சிங் மகன் எம்.பி என்பதையும் மக்களிடம் கூற வேண்டும். 
வாரிசு அரசியல் பற்றிப் பேசும் போது பாஜக அவர்களது கட்சியில் உள்ளவர்கள் பற்றியோ, அவர்களின் கூட்டணி கட்சிகள் குறித்தோ பேசுவதில்லை. காங்கிஸை மட்டும்தான் விமர்சிக்கின்றது. ஆனால் வாரிசு அரசியல் மாற வேண்டும் என்பதே எனது கருத்து. புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வாரிசு என்ற ஒரே தகுதியில் யாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம் “தமிழகத்தில் தற்போது அரசாங்கம் என்பதே இல்லை. புதிதாக வந்துள்ள ஆளுநர் நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றால், உடனடியாக சட்டப்பேரவையை கலைக்க வேண்டும். பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். கட்சியிலும், மக்கள் மத்தியிலும் ஆதரவே இல்லாதவர்கள்தான் தற்போது ஆட்சியை நடத்துகின்றனர். தமிழக அரசில் பாஜகவின் நேரடியாக தலையிட்டாலும், குறுக்கு வழியில் தலையிட்டாலும் அவர்களுக்கு இங்கு செல்வாக்கு என்பதே இல்லை” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close