[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

புதிய வாக்காளர் சரிபார்ப்பில் விழிப்புடன் இருங்கள்: ஸ்டாலின் அறிவுரை 

m-k-stalin-advice-for-our-party-codders

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு‌‌ பணிகளில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க.வினரை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 31ஆம் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், பெயர்களை நீக்கவும், திருத்தம் செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளது. அந்தக் கால அவகாசத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 
வாக்காளர் பட்டியலில் எவ்விதமான தில்லுமுல்லுகளையும் ஆளுங்கட்சியினர் செய்வதற்கு இடமளித்து விடக்கூடாது என்று தி.மு.க.வினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒருவருக்கே 9 அடையாள அட்டைகள் கிடைக்க செய்த மோசடித் தனத்தை ஏற்கனவே ஆளுங் கட்சியினர் அரங்கேற்றியிருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், விழிப்புடன் இருந்து விளைச்சலைப் பாதுகாத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close