[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
 • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
 • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
 • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
 • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
 • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
 • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
 • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
அரசியல் 05 Oct, 2017 01:05 PM

டெங்கு காய்ச்சலால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின்

above-400-dead-for-dengue-fever-mk-stalin

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக ஆதாரப்பூர்வ செய்திகள் கிடைத்திருக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல மருத்துவமனைகளுக்கு சென்று இன்று நோயாளிகளை பார்வையிட்டேன். குறிப்பாக சென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகிறது? அதில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். இது தவிர கொளத்தூர் தொகுதியில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்றும் அங்குள்ள நிலைமையை தெரிந்து கொண்டேன்” என்றார்.

மேலும், “சுகாதாரத்துறையின் செயலாளரே 10,000-க்கும் அதிகமானார் டெங்குவால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டதற்காக அதனை வரவேற்கிறேன். ஆனால் மொத்தமாக 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் உண்மையை மறைத்து தெரிவித்துள்ளனர். தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். 400-க்கும் அதிகமானோர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக செய்தி இருக்கிறது. மாநகராட்சிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை முன்கூட்டியே ஓரளவிற்கு சுத்தப்படுத்தியிருந்தால் டெங்குவை ஓரளவிற்கு கட்டுப்படுத்தியிருக்க முடியும்” என்றார்.

அதுமட்டுமில்லாமல், “குட்கா விவகாரத்தில் காவல்துறை 40 கோடி ரூபாய் மாமூல் வாங்கியுள்ளனர். இப்போது, வாக்கி டாக்கி வாங்குவதற்கான டென்டர்விடுவதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழலை பொறுத்தவரை உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் தான் அதிகமாக நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையிலேயே இந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே இருந்த ஆளுநர் போன்று புதிய ஆளுநர் செயல்படமாட்டார் என்று நம்புகிறோம். தமிழக அரசியல் சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ற நடவடிக்கையை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டாலும் நீதிமன்றம் மேலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அது தமிழக மக்களுக்கும் நல்லதாக இருக்கும்” என்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close