[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
 • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
 • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
அரசியல் 05 Oct, 2017 11:15 AM

அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வாரா புதிய ஆளுநர் புரோஹித்?

challenge-before-tn-new-governor

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள பன்‌வாரிலால் புரோஹித் இன்று மதியம் சென்னை வருகிறார். நாளை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவர் பதவியேற்க உள்ளார். அவருக்கு முன் சவாலான பணிகள் நிறைய உள்ளன.

கடந்த ஒராண்டாக தமிழகத்திற்கு பொறுப்பு ஆளு‌நர் மட்டுமே இருந்து வந்த நிலையில், பன்‌வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், புதிய ஆளுநர் பல சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ‌18 பேர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அதனை ஆளுநர் எவ்வாறு கையாளப்போகிறார் என்பது முதல் கேள்வியாக உள்ளது.

அமை‌ச்சரவையை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள டிடிவி தினகரன் தரப்பினர், இது‌ தொடர்பாக ஏற்கனவே இருந்த ஆளுநரிடம் அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய ஆளுநர் பன்வாரி‌லால் என்ன முடிவெடுப்பார் என கேள்வி எழுந்துள்ளது. மேலும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்புடைய வழக்கில், தீர்ப்பு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவ்விவகாரத்தில் எந்த முடிவையும் பன்வாரிலால் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத ஆட்சி நடைபெறுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து புகார் கூறிவரும் நிலையில், அவர்களின் புகார் குறித்தும் ஆராய்ந்து‌ நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஆளுநருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் புகார்களை சுமத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக ஆளுநரிடம் ஊழல் பட்டியலை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இது ஆளுநருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர ‌பல்கலைக்கழகங்களில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் அவர் விசா‌ரணை செய்ய வேண்டியுள்ளது. தம்முன் உள்ள சவால்களை புதிய ஆளுநர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close