[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

ஊழலுக்கு துணை போகும் முதல்வருக்கே எதிர்ப்பு.. ஆட்சிக்கு அல்ல: டிடிவி தரப்பு வாதம்

ttv-lawyer-argument-in-chennai-high-court

ஊழலுக்கு துணை போகும் முதல்வருக்கே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஆட்சியை எதிர்க்கவில்லை என்றும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்தார்.

சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கையும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் வழக்கையும் ஒன்றாகத் தான் விசாரிக்க வேண்டுமா என உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு கேள்வி எழுப்பினார். இதனையடுத்து சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கே முதலில் விசாரணைக்கு வந்தது.

அப்போது டிடிவி தினகரன் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடும்போது, “ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கூட அனுப்பப்படவில்லை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

தகுதி நீக்கத்திற்கான உத்தரவு தங்களுக்கு நேரடியாக வழங்காமல் முதலில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் துணை முதலமைச்சராக ஆன பின்பே தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும் டிடிவி தினகரன் தரப்பில் புகார் கூறப்பட்டது. ஊழலுக்கு துணை போகும் முதல்வருக்கே எதிர்ப்பு எனவும் ஆட்சிக்கு அல்ல என்றும் வழக்கறிர் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார். இதனிடையே ஆட்சியை கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close