[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

நல்லது செய்வார் ரஜினிகாந்த்: லதா ரஜினி பேச்சு

latha-rajini-about-rajinikanth-political-entry

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் தமிழகத்திற்கு நல்லது செய்வார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும் என்றார். இருப்பினும் அவர் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் தமிழகத்திற்கு நல்லது செய்வார் எனக் குறிப்பிட்ட அவர், நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன்,  தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் விரைவில் தனது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் தமிழகத்திற்கு நல்லது செய்வார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close