[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

மக்கள் மாறாமல் தூய்மை இந்தியா சாத்தியமில்லை: பிரதமர் மோடி

people-not-leaders-can-realise-dreams-of-clean-india-says-pm

125 கோடி மக்களின் மனநிலை மாறாமல் தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. அதே ஆண்டு தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி மோடி தொடங்கி வைத்தார். நேற்றுடன் இந்த திட்டம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

காந்தியின் 149-வது பிறந்தநாளான இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு குறித்து விஞ்ஞான் பவனில் உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:-

  • தூய்மை இந்தியா திட்டம் ஒரு மக்கள் இயக்கம்
  • தூய்மை இந்தியா திட்டத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. 
  • தூய்மையான இந்தியாவை மக்களால் தான் கனவு காண முடியும். தலைவர்களால் முடியாது. 
  • ஆயிரம் மகாத்மாக்கள் மற்றும் லட்சக்கணக்கான பிரதமர்களால் தூய்மையான இந்தியாவை வழங்க முடியாது. 125 கோடி மக்களால் தான் முடியும். 
  • மக்கள் மனநிலை மாறாமல் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை அடைய முடியாது.
  • 125 கோடி மக்களும் ஒரே புள்ளியில் இணைந்தால் எந்த திட்டத்தையும் எளிதில் நிறைவேற்றி விடலாம்
  • தூய்மையின் தேவையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தாங்களாக முன் வந்து செய்வதில்லை
  • என்னை விமர்சனம் செய்யுங்கள், ஆனால் தூய்மை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close