[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
  • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
  • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
  • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
அரசியல் 02 Oct, 2017 01:40 PM

துண்டு பிரசுரம் விநியோகித்த தினகரன் ஆதரவாளர்கள் கைது

ttv-supporters-arrested-at-salem

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும் சேலத்தில் துண்டுபிரசுரம் விநியோகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட டிடிவி தினகரன் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலத்தில் கடந்த 30 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அன்றைய தினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான வெங்கடாசலம், தாதகாப்பட்டி பகுதியில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பான நோட்டிஸ் விநியோகித்தார். அந்த துண்டுபிரசுரத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக அதிமுகவினர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இந்தப்புகாரின் அடிப்படையில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், எஸ்.கே. செல்வம் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் வெங்கடாசலம் உள்ளிட்ட 3 பேரை அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடாசலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக மாநகர செயலாளராக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close