[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

113 எம்எல்ஏக்கள், 43 எம்பிக்கள் ஆதரவு: ஈபிஎஸ், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு

ops-and-eps-submits-113-mlas-and-43-mps-support-in-election-commission

அதிமுக அணிகள் இணைந்து விட்ட நிலையில், தங்கள் தரப்பில் 113 எம்எல்ஏக்கள், 43 எம்பிக்கள் இருப்பதாக டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் சின்னம் மற்றும் கட்சிப் பெயருக்கு உரிமை கேட்டு பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய இன்றுடன் கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளின் தரப்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது இரண்டு அணிகளும் இணைந்துவிட்ட நிலையில், தங்கள் தரப்புக்கு 113 எம்எல்ஏக்கள் மற்றும் 43 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

மேலும், கட்டுக்கட்டாக கூடுதல் பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அக்டோபர் 6ஆம் தேதி விசாரணை நடத்திய பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close