[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
  • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
  • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
  • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
  • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசியல் 26 Sep, 2017 09:14 PM

கருணாநிதி நலமாக இருக்கிறார்.... புகைப்படம் வெளியீடு

karunanidhi-is-fine-photo-released

திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

உடல்நல கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தேவைப்படும் பொழுது மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனையடுத்து பேசிய திமுக எம்.பி.யும், அவரது மகளுமான கனிமொழி, கருணநிதியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கருணாநிதியை, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வதந்திகளை பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி நூற்றாண்டுகளைக் கடப்பார் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close