[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
அரசியல் 25 Sep, 2017 09:53 PM

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதால் சிங்களவர்கள் மிரட்டினர்: வைகோ புகார்

vaiko-threatened-by-eelam-tamils

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தன்னை சிங்களவர்கள் மிரட்டியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகார் தெரிவித்துள்ளார். பிரச்னை ஏற்படுத்தி தன்னை வெளியேற்றவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கையின், ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐந்து ஆறு முறை வைகோ உரையாற்றியுள்ளார். இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தன்னை சிங்களவர்கள் மிரட்டியதாக வைகோ தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் பேசிய அவர், " ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நான் உரையாற்றிய சில நிமிடங்களில், இலங்கை நாட்டை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என பெண்மணி ஒருவர் கேட்டார். நான் சற்று குழப்பத்தில் நீங்கள் சிங்களப் பெண்மணியா எனக் கேட்டேன். ஆமாம் என்றார். உங்களை போன்ற பெண்களான ஈழத்தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களே? அவர்களை பற்றி நான் ஏன் பேசக்கூடாது எனக் கேட்டேன். அந்த சமயத்தில் கிட்டத்தட்ட நான்கு ஐந்து பேர் என்னை சூழந்து கொண்டனர்.  மேலும்,  பிரச்னை ஏற்படுத்தி என்னை வெளியேற்ற திட்டமிட்டனர். அதில் ஒருவர், மற்றொருவரிடம் இவர் தான் வைகோ என்றார். தொடர்ந்து அவர்கள் என்னைப் பார்த்தபடி முறைத்துக் கொண்டிருந்தனர். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிங்களவர்கள் அங்கு வந்திருந்தினர். அவர்கள் என்னை மிரட்டினார்கள்" என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close