[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை: விசாரணை கோருகிறார் சு.சுவாமி

probe-rahul-s-secret-brirish-citizenship-s-swamy

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ரகசியமாக பெற்றுள்ள இங்கிலாந்து குடியுரிமை குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ள அவர், 2003ல் இங்கிலாந்தில் பேக்டிராப் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த ஆவணங்களில், ராகுல் காந்தி தன்னை இங்கிலாந்து குடிமகன் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்பதால், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close