[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - உயர்நீதிமன்ற உத்தரவுகள் 

the-orders-of-the-high-court

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளது. 

திமுக மற்றும் தினகரன் சார்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற இரு மனுக்களும் இன்று
ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தடை நீட்டிப்பு

  • தமிழக அரசு பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி ஸ்டாலின் தரப்பில் செப்-13ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு
  • செப்-14ம் தேதி நடைபெற்ற விசாரணையில் செப்-20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு
  • இன்றுடன் காலஅவகாசம் முடிந்தநிலையில், நீதிபதி துரைசாமி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணை
  • நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உத்தரவு, மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும் என நீதிபதி உத்தரவு  


தகுதிநீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது

  •  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18பேரை சபாநாயகர் தனபால் கடந்த 18ம் தேதி தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
  •  தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18எம்.எல்.ஏக்கள் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மனு
  •  தகுதிநீக்கம் தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது
  •  வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு
  •  எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக தலைமைச் செயலாளர், கொறடா, முதலமைச்சர் பதிலளிக்க உத்தரவு 


இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடக்கூடாது

  • தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து 18தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்
  • இன்று வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடக்கூடாது என உத்தரவு
  • அக்டோபர்-4ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close