[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

காவிரியில் இன்று புனித நீராடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி

cauvery-maha-pushkaram-cm-palanisamy-participated

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கர விழாவில், இன்று முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொள்ள உள்ளதால் ‌அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி காலை 9 மணிக்கு மகா புஷ்கர் விழாவில் பங்கேற்று புனித நீராடுகிறார். இதனையொட்டி பாதுகாப்பு பணிகள் குறித்து காவிரி துலாக்கட்டத்தில் அமைச்சர் ஒ.எஸ். மணியன் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு நடத்தினர். மேலும், ஐஜி, டிஐஜிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். காவிரியில் புனித நீராடிய பின்னர் நாகையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்கிறார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 24-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. 144 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த மகா புஷ்கரம் விழாவில் கலந்துகொண்டு, காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்குவதுடன், மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close