[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் நடவடிக்கை செல்லாது : உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கருத்து

supreme-court-lower-vijayan-commented

டிடிவி தினகரன் அதிமுக அம்மா அணியைச்  சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் தனபால். அந்த 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான இந்த நடவடிக்கை முறையானதா என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.எம்.விஜயன் புதிய தலைமுறை இணையதளத்திற்கு அளித்த ப்ரத்யேக பேட்டியில், “10 வது அட்டவணை படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டப்படி செல்லாது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறினாலோ அல்லது கட்சியைவிட்டு விலகினாலோ அல்லது இருக்கின்ற கட்சியை விட்டு வேறு கட்சிக்கு தாவினாலோதான் இந்த நடவடிக்கை செல்லும். அந்த 18 எம்.எல்.ஏக்களும் அதே கட்சியில்தான் உள்ளார்கள். வேறு கட்சிக்குப் போகவில்லை. அப்படி இருக்கும் நிலையில் 10வது அட்டவணையின் படி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை செல்லாது. அதேபோல் கட்சியின் கொறடா உத்தரவு என்பது சட்டமன்றத்திற்குள் தான் செல்லுபடியாகும். சட்டமன்ற உள் விவகாரங்கள் சம்மந்தமாகதான் கொறடா உத்தரவு போட முடியும். சட்டமன்றத்திற்கு வெளியில் ஆளுநரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதை கொறடா தடுக்க முடியாது. கேள்வி எழுப்பவும் முடியாது. இந்த உத்தரவு விதியை மீறிய செயலாகும்” என்று கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த வழக்கறிஞர், “விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு வரப் போகின்ற சூழலில் இந்த மாதிரியான நடவடிக்கை எடுத்திருப்பது ஒருவிதமான அரசியல் சூழ்ச்சியாகும். இவர்களை வெளியேற்றிவிட்டு ஒரு பொய்யான வாக்கெடுப்பை நடத்தி தங்களின் ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி தரப்பினர் முயன்றுள்ளார்கள்” என்று விஜயன் கூறினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close