[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
 • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
 • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
 • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
 • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
 • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
 • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
 • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
 • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
அரசியல் 17 Sep, 2017 06:10 PM

தினசரி பெட்ரோல், டீச‌ல் விலை நிர்‌ணயிக்கும் முறை: ஸ்டாலின் கண்டனம்

mk-stalin-condemns-petrol-diesel-price-hike

மக்களை மிக மோசமாக பாதிக்கும் தினசரி பெட்ரோல், டீச‌ல் விலை நிர்‌ணயிக்கும் முறையை திரும்பப் பெறவும், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை தடுக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு 11 முறை பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி‌ தினமும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதித்ததாக கூறியுள்ளார். இன்றைக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் 73.09 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 62.02 ரூபாய்க்கும் விற்கப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டதாக அவர்‌ குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பு இல்லை என்றும் வாகனம் உள்ளவர்கள் யாரும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியிருப்பது மக்களின் துயரங்களைப் பற்றி மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு மட்டுமல்ல, அந்த அரசின் கீழ் பணியாற்றும் அமைச்சர்களும் உணர்வதில்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளர்.

அப்பாவி மக்களையும் அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிரந்தரமாக தடுத்து நிறுத்த, தினசரி விலை உயர்வு கொள்கையை மறுபரிசீலனை செய்து அந்த கொள்கையை உடனடியாக திரும்பப் பெறவும், சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலைகுறைப்பின் பயன்கள் சாதாரண மக்களுக்கு சென்றடையவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close