[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 253 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்களாக தெரிகின்றனர்: கமல்ஹாசன்
அரசியல் 16 Sep, 2017 08:59 AM

தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார்: எடப்பாடி பழனிசாமி தாக்கு!

cm-speech-about-dinakaran

டிடிவி தினகரன் ‌விரைவில் சிறைக்கு செல்வார் என்பதை, மாமியார் வீட்டுக்கு செல்வார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசினார்.

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அணியினரின் சார்பாக சென்னை மின்ட் பகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி‌, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை கொண்டாட தகுதி உள்ள ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறினார். திமுக கட்சி பதவிக்காகவும், ஆட்சிக்காகவும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும் என்று கூறிய அவர், அதிமுக குறித்து பேசி வரும் டிடிவி தினகரன், கடந்த 10 ஆண்டு காலம் எங்கு சென்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன் தினகரன், திமுக உடன் கூட்டணி வைத்து செயல்படுகிறார் என்றும், மானம் உள்ள எந்த அதிமுக தொண்டனும் இதை செய்யமாட்டான் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், “தினகரன் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சொல்கிறார். நான் வீட்டிலிருந்துதான் வந்தேன். இப்போது நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குதான் செல்வேன். ஆனால் டிடிவி தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்லப் போகிறார்” என்று பேசினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close