[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

ஸ்டாலினை சந்தித்தது ஏன்?: ஹெச்.ராஜா விளக்கம்

why-stalin-met-h-raja-s-explanation

தனது மணி விழாவில் பங்கேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவே அவரை சந்தித்ததாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “எனது மணி விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இம்மி அளவு கூட அரசியல் பேசவில்லை. இது முற்றிலும் அரசியல் கலக்காத ஒரு சந்திப்பு. எனது மகன் திருமணத்தின்போது கூட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இப்போது எனது மணி விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். நான் எப்போதும், தனி மனித உறவையும், அரசியல் வாழ்க்கையும் குழப்பிக் கொள்ள மாட்டேன். அரசியல் ரீதியாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அது சகஜம் தான். ஸ்டாலினிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கருதி அவரை நேரில் சந்திக்கவில்லை” என்றார்.

அரசியல் ரீதியாக ஹெச்.ராஜாவிற்கும், ஸ்டாலினுக்கும் இடையே எப்போதுமே கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close