[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு

ttv-backed-mlas-petition-to-demand-a-majority

முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22 ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் இதுதொடர்பாக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளோடு, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவோம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆளுநரும், இதுதொடர்பாக முடிவு ஏதும் அறிவிக்காமல் மும்பை சென்றதால், எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பிலும், முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, தமிழக அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close