[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
அரசியல் 13 Sep, 2017 09:24 PM

சபாநாயகருடன் எம்எல்ஏ வெற்றிவேல் திடீர் சந்திப்பு

mla-vetrivel-meets-speaker

டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்யும்படி, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, ஆகஸ்ட் 24 ஆம் தேதி 19 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

அனைவரும் தனித்தனியே, 7 ஆம் தேதி நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், ஜக்கையன் மட்டும் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார். இதனையடுத்து, வரும் 14 ஆம் தேதி அதாவது நாளை, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், சபாநாயகர் தனபாலை வெற்றிவேல் சந்தித்திருப்பது முக்கிய நிகழ்வாக ‌கருதப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close