[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்
  • BREAKING-NEWS அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன்; இந்த ஆட்சி சரியில்லை என்பதாலேயே நான் வருகிறேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கேரளாவில் 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் பேருந்துகளின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
  • BREAKING-NEWS அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ
  • BREAKING-NEWS கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்?- உச்சநீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகராட்சி வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை- ரூ.74.38, டீசல் விலை- ரூ.65.67

ஸ்லீப்பர் செல்கள் யார்..? டிடிவி தினகரன் விளக்கம்

ttv-dhinakaran-explains-about-sleeper-cells

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது தங்களுக்கு ஆதரவாக உள்ள ஸ்லீப்பர் செல்கள் யாரென்று தெரியவரும் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நேரடியாக 21 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது எங்களுக்கு ஆதரவாக உள்ள ஸ்லீப்பர் செல்கள் யாரென்று தெரியவரும். பொய் வழக்கு போட்டுவிடுவோம் என்று இங்குள்ள காவல்துறையை அனுப்பி, அங்குள்ள எம்எல்ஏக்களை மிரட்டி பார்க்கிறார்கள். அவர்கள் அதை அங்குள்ள காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் நாங்கள் நீதிமன்றத்தை நாடி, காவல்துறை மீதும் அதற்கு அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close