[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
 • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
 • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
 • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
 • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
அரசியல் 13 Sep, 2017 08:24 PM

அனிதா தற்கொலை: மாதர் சங்கம் ஏன் போராடவில்லை என டி.ராஜேந்தர் கேள்வி

t-rajendar-comments

அனிதா தற்கொலை பிரச்னையில் மாதர்சங்கம் ஏன் போராட்டம் நடத்தவில்லை என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “பீப் பாடலுக்காக என் வீட்டு வாசல் வரை வந்து முற்றுகையிட்டுப் போராடிய மாதர் சங்கத்தினர் அனிதா தற்கொலைக்காக  போராடவில்லை ஏன்? என் மகனுக்கு எதிராக பீப் சாங் போராட்டம் அவ்வளவு நடந்தது. அந்த பீப் சாங்குக்காக போராடின மகளிர் அணியினர் எல்லாம் அனிதாவுக்காக போராடவில்லையே? எங்கே போனார்கள் அவர்கள் எல்லாம்? பீப் சாங் போராட்டம் சிம்புக்கு எதிராக தூண்டிவிடப் பட்ட சூழ்ச்சி வலை. இதுதான் உண்மை நிலை. வழக்குப் போட்ட காஞ்சிபுரம் உட்பட பல ஊர் நீதி மன்றங்களுக்குப் போய் போரடி தான் நான் ஜெயித்திருக்கிறேன். புகார் கொடுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு ஏறிபோய் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறேன்.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதோடு “அனிதாவின் ஆன்மாவும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் எட்டப்பாடி பழனிசாமி அரசை மன்னிக்காது”என்றும் எச்சரித்தார்.
 
சில மாதங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர் மகன் சிம்பு ‘பீப்’ பாடல் என்ற புதிய வடிவில் ஒரு பாடலை வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் பெண்களை தரக்குறைவாக குறிப்பிடும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறி மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தினர். சிம்பு பொது மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டம் வாபஸ் வாங்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் இந்தப் பிரச்சினையை நீதிமன்றம் மூலமே தீர்த்து கொள்ள விரும்புகிறோம். மன்னிப்பு கேட்க முடியாது என்று சிம்பு தரப்பில் கூறப்பட்டிருந்தது. 

 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close