[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்
  • BREAKING-NEWS வனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
  • BREAKING-NEWS கோவையில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்- டீன் அசோகன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல்
  • BREAKING-NEWS "பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்": பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு

நிர்பந்தம் செய்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து: தினகரன் தரப்பினர் குற்றச்சாட்டு

enforcing-and-signing-to-the-members-of-the-general-council-dinakaran-faction-charges

பொதுக்குழு கூட்டத்திற்கு தேதி அறிவித்த பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற முயற்சிப்பது ஏன் என ,டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 12-ம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, சுமார் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான அழைப்பு கடிதம் கொரியர் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

வரும் செவ்வாய்கிழமை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம்‌, முதலமைச்சர் தரப்பினர் நிர்பந்தம் செய்து கையெழுத்து வாங்கி வருவதாக, தினகரன் அணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனிடையே பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தினகரன் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை, நாளை நடைபெற உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close