[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூகுள் நிறுவனம் ரூ.6.43கோடி நிதியுதவி
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: பனிஹால் எஸ்.எஸ்.பி துணை ராணுவப் படை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
 • BREAKING-NEWS நாமக்கல்: கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
 • BREAKING-NEWS சென்னையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS தசரா விழாவையொட்டி சென்னையில் இருந்து மைசூருவுக்கு விமான சேவை தொடக்கம்
 • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீர்: பிஜிபெஹரா ரயில்நிலையத்தில் ஹிஸ்புதல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் கைது
 • BREAKING-NEWS காவிரி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS குண்டர் சட்ட நடவடிக்கை ரத்தானதை அடுத்து மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி விடுவிப்பு
 • BREAKING-NEWS எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS இன்று மாலை நடப்பதாக அறிவிக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பு
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது அதிகார துஷ்பிரயோகம்: சீமான்
 • BREAKING-NEWS எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பற்றி விமர்சிக்க திமுகவுக்கு அருகதையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல் 10 Sep, 2017 01:42 PM

காலி சேர்களை பதிவிட்டு காலித்தனம் செய்வதா? தமிழிசை ஆவேசம்

leave-empty-invites-tamilnadu

நீட் விவகாரத்தில் போராடுமாறு மாணவர்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக கிராமங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக கூறிய அவர், திருச்சி பொதுக்கூட்டத்தில் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார். திருச்சி பொதுக்கூட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காலிச்சேர்களை பதிவிட்டு காலித்தனம் செய்ய வேண்டாம் என்றும், பாஜக ப‌ற்றி திரித்துக் கூறுப‌வர்களை திருப்பி அடிக்கத் தொடங்கி இருப்பதாகவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ’எதிர்க்கட்சிகள், மாணவர்களை எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவிகளை ரோட்டில் பல மணி நேரம் நிற்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். அதே பள்ளிக்கு சென்று நீட் நல்ல திட்டம் என எடுத்துரைக்கப் போகிறோம். நீட் தேர்வின் அவசியம் குறித்து கிராமம் கிராமமாக சென்று எடுத்துச் சொல்லப் போகிறோம். மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடக்கின்ற போராட்டங்கள் மாணவர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. செப்டம்பர் 13 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் நீட் எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு எதிராக, செப்டம்பர் 14 ஆம் தேதி நீட் ஆதரவு ஆர்பாட்டம் நடைபெறும்’ என்று கூறினார்.

மேலும், ’திருச்சி பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் வரவில்லை என்பது பொய் பிரச்சாரம். எனது ட்விட்டர் பக்கத்தில் பார்க்க முடியாத, கேட்க முடியாத, உணர முடியாத அளவுக்கு கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள். மாலை 5 மணிக்கே அனைவரும் வருவதற்கு முன்பே புகைப்படம் எடுத்துப் போடுகிறார்கள். கூட்டம் முடிந்தபிறகு ஃபோட்டோ எடுத்துப் போடுகிறார்கள். மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள். திமுகவுக்கு வந்த கூட்டத்தை விட அதிகமான கூட்டம் எங்களுக்கு திருச்சியில் கூடியது. சமூக வலைத்தளங்களில் காலிச் சேர்களைப் போட்டு காலித்தனம் செய்யாதீர்கள். திரித்துக் கூறுபவர்களை நாங்கள் திருப்பியடிக்க தொடங்கிவிட்டோம். அவர்கள் திருந்தி வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்று தமிழிசை பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close