[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

தமிழிசையை தரமற்று விமர்சிப்பதா? சூர்யா நற்பணி இயக்கம் கண்டனம்

actor-surya-condemned-his-fans

தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, ரசிகர்கள் தரமற்று விமர்சிப்பதற்கு நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி சூர்யா நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வை பற்றி தமிழ் இந்து நாளேட்டில் சூர்யா, தம் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மட்டும்  மேலோட்டமாக விமர்சித்துள்ளார். அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் தமிழிசை செளந்தரராஜனை விமர்சிப்பதாக அறிகிறோம்.  இதை சூர்யா, ஒருபோதும் ஏற்க மாட்டார்.  கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு. அதை விடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா எப்போதும் உறுதியாக இருப்பார். 

அகரத்தை பற்றியும், அண்ணன் சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும்.  'செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்' என்ற தாரக மந்திரத்தில்தான் நம் நற்பணி இயக்கமானது எப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ’விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள்’ என்ற சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது.  இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம் உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. நம் செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது.  எம் தம்பிமார்களின் செயல்கள், மதிப்பிற்குறிய தமிழிசை செளந்தரராஜனை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close