[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
அரசியல் 07 Sep, 2017 04:12 PM

தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

dmk-mlas-should-not-act-supreme-court-orders

குட்கா விவகாரத்தில் மறு உத்தரவு வரும் வரை தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்தது தொடர்பாக விளக்கம் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை உரிமைக் குழு கடந்த மாதம் 28ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து 21 தி.மு.க உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வாதாடினார். அப்போது குட்கா பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க சபை விதிகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். விதிகள் இல்லாதபோது அதை மீறியதாக கூறுவது எப்படி சாத்தியம் என்று அவர் கேள்வி எழுப்பினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காகவே, தி.மு.க உறுப்பினர்கள் 21 பேரை இடைநீக்கும் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது பற்றி வாதம் செய்ய வேண்டியுள்ளதால், வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார். மேலும் வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என அவை உரிமைக் குழுவுக்கு அறிவுறுத்துவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்தார். இதனை ஏற்ற நீதிமன்றம், உத்தரவாதத்தின் படி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close