[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
  • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
  • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
  • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
  • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
அரசியல் 07 Sep, 2017 03:33 PM

எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை: மேலும் 3 எம்.எல்.ஏக்கள் வாபஸ் கடிதம்

there-is-no-confidence-in-edappadi-government-3-mlas-withdraw-letter

முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தினகரன் முன்னிலையில் மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது அணியில் கடைசியாக இணைந்த கருணாஸ், கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் எம்.பிக்களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது, முதல்வரை மாற்றக்கோரி ஏற்கனவே 19 எம்.எல்.ஏக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் கருணாஸ், கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர், முதலமைச்சர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். அத்துடன் தலைமை நிலைய செயலாளர் பதவி கேட்ட ஜக்கையன், திடீரென அணி மாறிவிட்டதாகவும் அவர் கூறினார். முன்னதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன், முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close