[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

’பிக்பாஸ் வரவில்லையென்றால் கமல் அரசியல் பேசியிருக்க மாட்டாரோ..’

kamal-hassan-tweet-and-controversial-remarks

போராட்டத்திற்கு ட்விட்டரும் களமே என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ள கமல், ’களம் இறங்கிவிட்டதை உணராத தமிழ் ட்விட்டர்ஸ் அனைவருக்கும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம்.’எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும், நையாண்டி செய்தும் பலர் ரீட்விட் செய்துள்ளனர். அவரது கருத்திற்கு ஆதரவாக ‘அரசியலுக்கு வருவதும் வராததும் தங்கள் விருப்பம்.. ஆனால் ஏழை மாணவர்களின் நலனுக்காக இது போன்று குரல் கொடுப்பதை நிறுத்தாதீர்.’’ஆண்டவா நீ வெற்றி பெறாத களம் எதுவுமில்லை... அரசியலும் அதில் சேரட்டும்’

 ’ஆண்டவா நீங்க வாங்க மக்கள் (மாணவர்கள்)உங்க பக்கம் தான். ‘நடிகர் திலகத்திற்கு மாற்று என நிருபித்தவர்...மக்கள் திலகத்திற்கும் மாற்று என நிருபிக்கும் நாள். கமல்ஹாசன் ஆகிய நான்...’ ’குரல் வழியே களம் இறங்குவோம் முதலில்... எதிர்க்கட்சி தலைவர் இல்ல, அரசியல்ல எந்த ஒரு பதவிலையும இல்ல. ஆனா தனிஒருவனாக ஒரு அரசாங்கதுக்கே சிம்மசொப்பனமா இருக்காருபாருங்க அதான் ஆண்டவர்’

’கட்சி ஆரம்பிக்கனும் இல்லனா நடுரோட்ல போய் போராடுனும். அப்போதான் நாங்க ஏத்துகுவோம்னு சில பால்வாடிகள் சொல்வதை பொருட்படுத்தாதீர்கள்’ என பலரும் கமெண்டை பதிவு செய்துள்ளனர்.

அவரது இந்த கருத்தை விமர்சித்துள்ள பலர், ‘பிக்பாஸ் வரலைனா ஆண்டவரு அரசியல் பேசமலே போயிருப்பாரோ என்னவோ?’ ’இந்த களத்துல பல ஆண்டுகாலமாக களமாடிகொண்டுதான் இருக்கிறோம் இனியுமிப்படி இருந்தால் பத்தோடு பதினொன்றாக இருக்குமேயொழிய எந்த மாற்றமும் நடக்காது’ ’நீர் அரசியலுக்கு வந்தால் பிக்பாஸில் உமக்கு வேண்டியோர்க்கு பாரபட்சம் காட்டியதுபோல் அரசியலிலும் பாரபட்சம்காட்டமாட்டீர் என்பதற்கு என்ன உத்தரவாதம்.’
’நீ மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நீதியாகவும், நேர்மையாகவும் தொகுத்து வழங்கியிருந்தால் உன்மேலுள்ள நம்பிக்கை பலமடங்கு எகிறியிருக்கும் ஆண்டவரே’ ’ட்விட்டர் களத்தில நாம போடற ட்விட்னால மாற்றம் கொண்டு வரமுடியுமா ஆண்டவரே?!’ ’களமாடி விளையாட மெரீனா இல்லையாம். அதான் இங்கயே ஆடுங்க சூளுரை பண்ணுறாரோ?’இது மாதிரி ட்விட்டுவதும் முதல்வர்கள் டெல்லிக்கு கடிதம் எழுதுவதும் ஒன்றே.. சல்லி காசுக்கு பிரோஜனம் இல்ல’ ’அதான்
ஒரு புள்ள செத்தப்புறம் போராடுறோம் .. மாமல்லர்னா முன்னமே போராடிருக்கனும்’ ’எந்த குப்பனும் சுப்பனும் டீவீட்டர் பாக்குறதில்லை ஆண்டவரே .. உங்களுக்கு பயம்னு சொல்லுங்க களத்தில் இறங்குவதற்கு செல்லாது செல்லாது..’  ’ட்வீட்டர் பேச்சும், குவாட்டர் பேச்சும் கணக்கில் வராது.’ ’நீங்க உங்க தெருவுல போய் எதிர்ப்பு தெரிவிங்க, பக்கத்து தெருகாரன்கூட பாக்கமாட்டான், டிவிட்டர்னா ட்ரம்ப் கூட பாப்பாரு, இது உலக மேடை’ ’ட்விட்டர்ல போராடறதைத்தான் களம்னு சொன்னீங்களா மாஸ்டர்.’  ’மீனவர்ல ஆரம்பிச்சி பல போராட்டம் இங்க பண்ணியாச்சு... ரோட்ல இறங்காத வரை எதுவும்
வேலைக்காவாது தலைவரே..’ எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close