[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆட்சியின் மீதான மக்களின் கோபம் திமுகவுக்கு சாதகமான ஓட்டுகளை பெற்றுத்தரும்- மருதுகணேஷ்
 • BREAKING-NEWS அதிமுகவிற்கு ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு சோதனைக்களம் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் மீண்டும் போட்டி
 • BREAKING-NEWS நாகை: வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
 • BREAKING-NEWS தலைமறைவாக உள்ள திரைப்பட பைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
 • BREAKING-NEWS கர்நாடகா: கல்புர்கியில் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கு ரோஜாப்பூ தருகிறது போலீஸ்
 • BREAKING-NEWS இரட்டை இலை கிடைத்ததால் இனி எந்த தேர்தல்களிலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக இருக்கும்- எம்.ஆர். விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS திருவாரூர்: அச்சிதமங்களத்தில் சாலையோரம் இருந்த 2 வீடுகளுக்குள் நிலக்கரி லாரி புகுந்து 2 பேர் காயம்
 • BREAKING-NEWS வேலூர்: 4 மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- கோ.அரி எம்.பி
 • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
 • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
அரசியல் 06 Sep, 2017 05:56 PM

மெஜாரிட்டி இல்லாத அரசுக்கு தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

secretariat-cooperates-with-non-magisterial-government-stalin-s-allegation

பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளும்கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துவிட்டது உள்ளங்கனி நெல்லிக்கனி போல தெரிவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். உட்கட்சி பிரச்னை எனக்கூறி இந்த அரசை நீடிக்கச் செய்ய மத்திய அரசும் ஆளுநரும் உள்நோக்கத்துடன் அமைதி காப்பது, சட்ட விரோதம் மட்டுமின்றி, சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு உலை வைக்கும் கேலிக்கூத்து என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு திமுகவும், மற்ற எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்த பிறகும், பெரும்பான்மையில்லாத அரசு நீடிக்க மத்திய பாஜக அரசும், உள்துறை அமைச்சகமும் உதவி செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், கூட்டப்பட்ட ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 109 பேர் பங்கேற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே கூறியிருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி தொடுத்த வழக்கில், அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் முதலமைச்சரை ஆதரிக்க வேண்டியதில்லை என்று அரசு தரப்பில் கருத்தைக் கூறியிருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், இதன்மூலம் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பே ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதற்குப் பிறகும் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடாதது சட்டவிரோத அரசு நடக்க ஆதரவு தருவாக உள்ளது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எனவே, பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, முதலமைச்சரோ, அமைச்சர்களோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுத்தால் தலைமைச் செயலாளர் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்ட விரோதம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close