[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
  • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
  • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
  • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
  • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
அரசியல் 06 Sep, 2017 11:18 AM

சித்துவேலை செய்தாலும் தேர்தல் வராது : அமைச்சர் ஜெயக்குமார்

minister-jayakumar-about-stalin

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவேண்டும் என யார் எந்த சித்து வேலை செய்தாலும், அது பலிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், அதனால் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக தற்போதுள்ள முதலமைச்சரை மாற்ற வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க எம்.பி கனிமொழி உடன் எதிர்கட்சியினர் சிலரும் சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி அ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நாளை ஆளுநரை சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், யார் எந்த சித்து வேலை செய்தாலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்ற எண்ணம் பலிக்காது என்று கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close