[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பொதுக்குழுவை கூட்டுவதா? தினகரன் கண்டனம்

ttv-condemns-general-body-meeting-held-by-eps

அதிமுக பொதுக்குழுவை முதலமைச்சர் பழனிசாமி தரப்பு கூட்டுவதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததை அடுத்து, வரும் 12-ம் தேதி பொதுக்குழுவை கூட்ட முதலமைச்சர் பழனிசாமி தரப்பு முடிவெடுத்துள்ளது. இதற்கு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள கொண்டாம். அப்படி கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மீது கழக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நோக்கத்திற்காக பொதுக்குழு கூட்டப்படுகிறது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 
கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close