[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்

action-resolutions-at-aiadmk-meeting

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் மொத்தமாக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக-வில் ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏ-க்கள் முதலமைச்சரை நீக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துவிட்டு, புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இதனிடையே, அதிமுக-வின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் முதலமைச்சர் பழனிசாமி உள்பட பலபேரை அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கம் செய்து வருகிறார். அதற்கு பதிலாக அவருக்கு ஆதரவாக உள்ளவரை டிடிவி தினகரன் நியமனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 30-க்கும் அதிகமான எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. கூட்டத்தில் மொத்தமாக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  முதல் தீர்மானமாக தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் ஒருவர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதும், அவரால் நியமிக்கப்பட்டவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதும் சட்டப் விதிகளுக்கு புறம்பானது. எனவே கட்சியில் நிர்வாகிகளை நீக்கவோ, புதியவரை நியமிக்கவோ டிடிவி தினகரனுக்கு எந்தவித உரிமையும் தகுதியும் கிடையாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா புகழ்பாடும் அமைப்புகளாக நமது எம்ஜிஆரும், ஜெயா டிவியும் செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போதும், இனி வரும் காலங்களிலும், அதிமுக-வையும், அதன் அரசையும் காப்பாற்றிட இயன்ற அனைத்தையும் செய்ய 4-ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close