[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மோடி கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார் - ஸ்டாலின் விமர்சனம்

narendra-modi-walks-out-stalin-s-criticism

தமிழக அரசியலில் அதிமுக இணைப்பது மூலம் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய ஸ்டாலின் இதனை தெரிவித்தார். அதிமுக அணிகள் இணையும் முன்பே பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு நடந்தது. துணை முதல்வராக ஓ.பி.எஸ்., பொறுப்பேற்றதும் கவர்னர் அவருக்கு பூங்கொத்து கொடுக்கிறார், சால்வை அணிவிக்கிறார். எடப்பாடி, ஓ.பி.எஸ்., கரங்களை பிடித்து சேர்த்து வைக்கிறார். இதில் இருந்தே பாஜக, தமிழக அரசை ஆட்டுவிக்கிறது என்பது உறுதியாகி விட்டது" என்றார். 

மேலும் பேசிய அவர் "மத்தியில் இருக்கும் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார் என்பது இதன் மூலம்தெள்ள தெளிவாக தெரிகிறது. நாங்கள் ஆட்சியை கவிழ்க்க போவதில்லை. அவர்களாகவே கவிழ்ந்து விடுவார்கள். மீண்டும் கருணாநிதி தலைமையில் ஒரு நல்லாட்சி மலரும்" என்றும் அவர் பேசினார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close