[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஆட்சியில் பங்கேற்றவர்கள் அரசை குற்றம்சாட்டுகின்றனர்: முதல்வர் பழனிசாமி

cm-palanisamy-speech-about-other-team-in-mgr-100-year-function

ஆட்சியில் பங்கெடுத்தவர்கள் தற்போது அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

அரியலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், ஆட்சிக்கும், கட்சிக்கும் சிலர் தொல்லை கொடுக்க முயல்கின்றனர். திமுக ஆட்சிகாலத்தை விட அதிமுக ஆட்சி காலத்தில் கல்வித்துறை வளர்ச்சியடைந்துள்ளது. கல்வித்துறைக்கு 2017-18ம் ஆண்டில் 26 ஆயிரத்து 932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் கல்வியில் வளர்ச்சி அதிகம். தமிழகத்தை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்ற இந்த அரசு பணியாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

அணிகள் இணைப்பிற்குப் பிறகு நடைபெற்ற இந்த முதல் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தார். இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 6 மாதத்துக்குப் பிறகு இரு அணிகள் இணைந்து ஒன்றாக பேசுவதில் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close