[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

துணை முதலமைச்சராக ஓபிஸ் பதவியேற்பு

ops-sworn-as-deputy-chief-minister

தமிழக துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.

துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். அவருக்கு நிதி மற்றும் வீட்டுவசதித் துறை இலாகா ஒதுக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்து.

இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனையடுத்து தொல்லியில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியயேற்றுக் கொண்டார். அவருக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் அமைச்சர்கள் குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close