[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
 • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
அரசியல் 11 Aug, 2017 09:55 PM

அணிகள் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது: அதிமுக பற்றி பொன்.ராதாகிருஷ்ணன்

its-good-if-admk-groups-merge-together-says-pon-radhakrishnan

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது என்றும், பாஜகவைப் பொறுத்தவரை தங்களை பலப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்வதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தமிழத்தைப் பற்றி மிக முக்கியமான செய்திகளைப் பற்றிப் பேசினார். குறிப்பாக, தமிழகத்தின் பாரம்பரியம் உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் சந்தித்த குறுகிய நேரத்தில் பேசினார். இது எங்களுக்கு பெருமையாக இருந்தது. வெங்கய்யா நாயுடு நாட்டுக்கு சொந்தமானவர். ஆனால் தொடர்ந்து தமிழகத்தின் நலனில் அக்கறை செலுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால் அவர் தமிழகத்தின் மீது தனி பாசமும், பற்றுதலும் கொண்டவர். அதிமுகவுக்குள் இருக்கும் பூசல் குறித்து வெங்கய்யா நாயுடு பேசவில்லை. அவர் தற்போது அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவராகிவிட்டார்” என்று கூறினார்.

மேலும், “தமிழகத்தின் இன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தால் அது அவர்களுக்கு நல்லது. பாஜகவை பொறுத்தவரை எங்களை பலப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்கிறோம். தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். பிரதமர் மோடியும் அதில் முனைப்புடன் இருக்கிறார். தமிழ் சமுதாயம் உயர்ந்த ஒரு நிலையை எட்ட வேண்டும் என்று எண்ணுகிறோம். பிரதமரும் அதில் ஆர்வமாகவும், உறுதுணையாகவும் இருப்பதால் விரைவில் அது நடக்கும் என்று நம்புகிறோம். வரக்கூடிய காலம் பாஜகவின் காலமாக தமிழகத்தில் அமையப்போகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து சில மாதங்களுக்குள்ளாக மிகப்பெரிய மாற்றங்கள் தமிழகத்தில் உருவாகும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி; பாஜகவுக்கு வந்தால் கூடுதல் மகிழ்ச்சி” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close