[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்

7 மாதங்களில் அதிமுக - ஒரு மீள்பார்வை!

recap-of-admk-last-7-months

அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்குப்பிறகு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது மறைவுக்குப்பிறகு அதிமுகவிலும், ‌‌ஆட்சி அதிகாரத்திலும் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின.

ஜெயலலிதா மறைவுக்கு அடுத்த நாளே முதலமைச்‌சராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படாத நிலையில், தற்காலிக பொதுச்செயலாளராக டிசம்பர் 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 31 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் சசிகலா. கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்த நே‌ரத்தில், கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலேயே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.‌ இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அதிமுகவின் சட்டமன்ற கட்சித்தலைவரானார் சசிகலா. ஆளுநர் அழைப்பு விடுத்தால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்கக்கூடும் என்றிருந்த நிலையில் இரண்டு நாட்கள் அமைதிக்குப்பிறகு பிப்ரவரி 7 ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்த தியானம் தமிழக அரசியல் களத்தை புரட்டிப்போட்டது. கட்டாயப்படுத்தி தன்னிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டதாக அவர் அளித்த‌பேட்டி அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான பிப்ரவரி 14 ஆம் தேதி மற்றொரு திருப்பமாக அமைந்தது. சசிகலா உள்ளிட்டோருக்கு சிறைத்தண்டனை உறுதியான நிலையில், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 17 ஆம் தேதி சசிகலா அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ‌இதைத்தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிளவு நீடிக்க, அப்போது வந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கோரின. இதில் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. அடுத்த பின்னடைவாக வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்த புகாரில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் அணி கோரிக்கை விடுத்த நிலையில், கட்சியில் இருந்து விலகியிருக்கப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்தது அடுத்த திருப்பமாக பார்க்கப்படுகிறது. அப்போதுதான் சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி, அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் தொ‌டங்கின. சிறையில் இருந்து டிடிவி தினகரன் வெளியே வந்தபோது, அவருக்கு எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து 37 எம்எல்ஏக்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

அணிகள் இணைய அளித்த 60 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையில், புதிய நிர்வாகிகள் ‌பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன், இனி கட்சியை வழிநடத்த வேண்டிய கடமையும், நாடாளுமன்ற தேர்தலில் ‌கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பும் தமக்கே இருப்பதாக அறிவித்தார். மேலும் வரும் 14 ஆம் தேதி முதல் மாவட்டந்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தச்சூழலில்தான் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் 2017ல் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close