[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

ரஜினி, கமலுக்கு நடுவே மு.க.ஸ்டாலின்!

rajini-and-mk-stalin-in-the-middle-of-kamal

முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலினும், நடிகர் கமல்ஹாசனும் இணைந்து நினைவுப்பரிசை வழங்கினர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பார்வையாளராக இருக்கையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரை அழைத்த திமுக 
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முரசொலி பவளவிழா நினைவுப்பரிசை வழங்கினார். அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்த நடிகர் கமல்ஹாசனும், மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ரஜினிகாந்த்திற்கு நினைவுப்பரிசை வழங்கினர். இருநட்சத்திரங்களுக்கு நடுவில் நின்று மு.க.ஸ்டாலின் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த விழாவில் ரஜினிகாந்த் மேடையில் பேசவில்லை.

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நடுவில் நிற்க ரஜினியும், கமலும் அருகருகில் நின்று இதேபோன்று போஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close