[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
 • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
 • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
அரசியல் 09 Aug, 2017 10:17 PM

ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

maneuver-against-governance-cm-palanisamy

ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சூழ்ச்சிகளை முறியடித்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமானடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னிலை வகித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டுவருவதாகக் கூறினார். விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிறப்புகளை சிலாகித்து பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா தான் என்று கூறிய முதலமைச்சர், அவரின் சாதனைகளை பட்டியலிட்டார். அவரது வழியில் நடக்கும் அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 198 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். விழாவில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “140 ஆண்டுகாலம் இல்லாத வறட்சி காணப்படுகிறது. எங்களுடையே சவாலே குடிநீர் பிரச்னைதான். குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை மக்களுக்கு நல்ல முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு குறித்து பேசிய அவர், ஆர்ப்பாட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்றார். ஆட்சியை கவிழ்க்கும் சூழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அதனை முறியடித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அனைத்து அமைச்சர்களும் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close