[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
  • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
  • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
  • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
  • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
  • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
அரசியல் 09 Aug, 2017 01:21 PM

முன்னறிவிப்பின்றி துறைமுகத் திட்டத்தை எப்படி தொடங்க முடியும்?: கிரண்பேடி

kiran-bedi-how-can-you-start-a-port-project-without-notice

எந்தவித முன்னேற்பாடும் இன்றி எப்படி துறைமுக மேம்பாட்டு திட்டத்தை தொடங்க முடியும் என ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் துறைமுக பணிகள் குறித்து அவ்வப்போது ஆளுநர் கிரண்பேடி விமர்சித்து வந்தார். இந்நிலையில் துறைமுக மேம்பாட்டு திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார் ஆளுநர் கிரண்பேடி

1. இந்த துறைமுக மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு புதுச்சேரி அரசு சரியான முன் ஏற்பாடுகள் எதுவும் செய்யாத போது இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி தொடங்க முடியும்? 

2. துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளை வெளியே கொண்டு செல்வதற்கு புறவழிச்சாலை ஏன் இதுவரை செயல்படுத்தப்படவில்லை? 

3. சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு போதிய பாதை வசதி உள்ளதா?

4. சரக்கு கையாளும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாட்டு அறை எங்கே ? 

5. சரக்குகளை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லும் பைபாஸ் சாலை திட்டத்தின் நிலை என்ன?

6. புதிய துறைமுக பகுதியில் இதற்கான அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா? 

என புதுச்சேரி அரசுக்கு துணை ஆளுநர் ஏராளமான கேள்விகளை கேட்டுள்ளார். துணை நிலை ஆளுநருக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருவதால், அங்கு அரசு திட்டங்கள் பல பாதிக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close