[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

விவசாயிகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் வேண்டுகோள்

participate-protest-for-farmers-mk-stalin

விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக இருக்கிறது என்கிற உணர்வினை மத்திய - மாநில அரசுகளுக்கு வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மாநில அரசின் விவசாயிகள் விரோத செயலுக்கு மத்திய அரசும் துணை நிற்பது வேதனையளிப்பதாக விமர்சித்துள்ளார்.

விவசாயிகளின் முழுக் கடன்களையும் தள்ளுபடி செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் கொள்முதல் விலை வழங்குவது, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள முழுத்தொகையையும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகளிடம் முன்வைத்து ‘இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின்’ சார்பில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close